தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவு: சேலம் மாவட்டத்தில் 37,752 பேர் தேர்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், 37 ஆயிரத்து, 752 பேர், பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றனர்.கொரோனாவால், பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு மதிப்பெண்கள், பள்ளிகளில் அக மதிப்பீடு மூலம், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதன்படி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, நேற்று, அவரவர் மதிப்பெண்கள், மொபைல் போன் எண்களுக்கு அனுப்பப்பட்டன.

சேலம்: சேலம் மாவட்டத்தில், 37 ஆயிரத்து, 752 பேர், பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றனர்.


கொரோனாவால், பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு மதிப்பெண்கள், பள்ளிகளில் அக மதிப்பீடு மூலம், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதன்படி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, நேற்று, அவரவர் மதிப்பெண்கள், மொபைல் போன் எண்களுக்கு அனுப்பப்பட்டன. சேலம் மாவட்டத்தில், 320 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து, 418 மாணவர்கள், 20 ஆயிரத்து, 334 மாணவியர் என, 37 ஆயிரத்து, 752 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவர்களின் மதிப்பெண் பட்டியல்கள், அந்தந்த பள்ளிகளிலும் ஒட்டப்பட்டன. கிராமப்பகுதிகளில் மாணவ, மாணவியர், பள்ளிக்கு சென்று மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். பள்ளிகளில் நீட் தேர்வுக்கு விண்ணப்பம், உயர்கல்விக்கு வங்கி கடன் பெற விண்ணப்பம், அதற்கு தேவையான ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

550க்கு மேல் எத்தனை பேர்? சேலம் மாவட்டத்தில், 551 முதல், 600 மதிப்பெண் வரை, 1,677 பேர், 501 முதல், 550 மதிப்பெண் வரை, 7,301 பேர், 451 முதல், 500 மதிப்பெண் வரை, 9,959 பேர், 401 முதல், 450 வரை, 9,787 பேர், 351 முதல், 400 மதிப்பெண் வரை, 6,691 பேர், 350க்கும் கீழ், 2,337 பேர் மதிப்பெண் பெற்றனர்.

மகிழ்ச்சியும்; ஏமாற்றமும்: பிளஸ் 2 தேர்ச்சி முடிவு குறித்து, சேலம் மாணவ, மாணவியரின் கருத்துகள்:


ஆர்.சூர்யா, அழகாபுரம்: ஆண்டு முழுதும் பாடம் நடத்தி, தேர்வு வைத்தாலே, அரசு பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பெறுவது கடினம். இதில், பாடம் நடத்தாத சூழலில், தேர்வு நடத்தியிருந்தால் பலருக்கும் பாதிப்பாக இருந்திருக்கும். அனைவரும் தேர்ச்சி மகிழ்ச்சிதான். மதிப்பெண் கணக்கீட்டிலும் பாதிப்பு இல்லை.


யு.விஜயலட்சுமி, அல்லிக்குட்டை: தேர்வு நடத்தியிருந்தால், இப்போது வாங்கியதை விட அதிகமாக வாங்கியிருப்பேன். ஏனெனில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகளை விட, பிளஸ் 2 தேர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படித்திருப்போம். இது சற்று ஏமாற்றம்தான்.


பி.பிரியதர்ஷினி, சேலம்: அனைவரும் தேர்ச்சி ஒரு வகையில் சந்தோஷம். மதிப்பெண்களும் நல்லதாக கிடைத்துள்ளது. தேர்வு நடத்தாமல் இருந்தாலும், முந்தைய தேர்வுகளில் நான் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே கணக்கீடு செய்து வழங்கியதில் திருப்திதான்.


பி.ஸ்வேதா, அம்மாபேட்டை: அரசு பள்ளிகளில் கூட வாட்ஸ்ஆப், கல்வி தொலைக்காட்சி என பாடம் நடத்தப்பட்டாலும், அவை அனைத்து தரப்பு மாணவருக்கும் சென்று சேரவில்லை. தேர்வு நடத்தியிருப்பின், பாதிக்கும் மேற்பட்டோர் தவறியிருப்பர். அனைவரும் தேர்ச்சி முடிவு நல்லதே.


எஸ்.நந்தினி பச்சப்பட்டி: தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நாள் முழுதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. அவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் போட்டியிடுவது கடினம். கடந்த கால தேர்வு அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட்டது சரி. திருப்தியற்ற மாணவர்கள், மீண்டும் தேர்வு எழுதலாம் என வாய்ப்பு தந்துள்ளதால், யாருக்கும் பாதிப்பு இருக்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X