பொது செய்தி

தமிழ்நாடு

ஓமலூரில் 14 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில், சேலம் மாநகராட்சியில், 34 பேர், ஓமலூர், 14, மேட்டூர் நகராட்சி, 11, மேச்சேரி, கெங்கவல்லி தலா, 6, தாரமங்கலம், வாழப்பாடி தலா, 5, சேலம், 4, நங்கவள்ளி, சங்ககிரி தலா, 3, கொளத்தூர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் தலா, 2, இடைப்பாடி, காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, அயோத்தியாப்பட்டணம், தலா

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில், சேலம் மாநகராட்சியில், 34 பேர், ஓமலூர், 14, மேட்டூர் நகராட்சி, 11, மேச்சேரி, கெங்கவல்லி தலா, 6, தாரமங்கலம், வாழப்பாடி தலா, 5, சேலம், 4, நங்கவள்ளி, சங்ககிரி தலா, 3, கொளத்தூர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் தலா, 2, இடைப்பாடி, காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, அயோத்தியாப்பட்டணம், தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, நாமக்கல், 9, தர்மபுரி, 8, ஈரோடு, 6, கள்ளக்குறிச்சி, சென்னை தலா, 4 என, வெளி மாவட்டத்தினர், 31 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம், சேலம் மாவட்டத்தில், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர், 136 பேர். இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 92 ஆயிரத்து, 142 பேர் ஆகும். அதில், குணமாகி வீடு திரும்பியவர், 88 ஆயிரத்து, 909 பேர். தற்போது, 1,705 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறந்தவர் மொத்த எண்ணிக்கை, 1,528 பேர். அதில், நேற்று இறந்த ஒருவர் அடக்கம். சளி தடவல் பரிசோதனை, நேற்று, 6,504 பேருக்கு நடந்தது. இதுவரை, 12 லட்சத்து, 99 ஆயிரத்து, 589 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.


தடை பகுதியான புளியம்பட்டி கிராமம்: ஓமலூர், புளியம்பட்டி, மாரியம்மன் கோவில் அருகே, 7 வயதுடைய இரட்டை குழந்தைகள் உள்பட, ஒரே குடும்பத்தில் உள்ள, ஏழு பேருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. ஏற்கனவே, அவர்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. நேற்று, மருத்துவ குழுவினர் அப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் உள்ள, 542 பேருக்கு, சளி, காய்ச்சல் உள்ளதா என, பரிசோதனை மேற்கொண்டனர். அப்பகுதி முழுதும், ஒரு வாரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், கருப்பூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X