உங்களுக்கே தெரியாமல் போலி ஐ.டி.,க்களில் உங்கள் போட்டோக்கள்; இணையத்தில் தேடி அலர்ட் ஆகுங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உங்களுக்கே தெரியாமல் போலி ஐ.டி.,க்களில் உங்கள் போட்டோக்கள்; இணையத்தில் தேடி 'அலர்ட்' ஆகுங்கள்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (3)
Share
மதுரை: 'போட்டோ என்னுடையது தான்; ஆனால் போஸ்ட் பண்ணினது நானில்லை'... இப்படி உங்களுக்கே தெரியாமல் உங்கள் போட்டோக்களை பயன்படுத்தி பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் 'போலி ஐ.டி.,க் களை உருவாக்கி உங்கள் நண்பர்களுக்கு 'பிரண்ட் ரிக்வஸ்ட்' கொடுத்து பணம் பறிக்கும் போலி ஆசாமிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்கெல்லாம் உங்கள் போட்டோக்களை
How To Find, Our Photos, Fake Profile, FakeID, Fake, Account, போலி ஐடி, போட்டோ, அலர்ட்

மதுரை: 'போட்டோ என்னுடையது தான்; ஆனால் போஸ்ட் பண்ணினது நானில்லை'... இப்படி உங்களுக்கே தெரியாமல் உங்கள் போட்டோக்களை பயன்படுத்தி பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் 'போலி ஐ.டி.,க் களை உருவாக்கி உங்கள் நண்பர்களுக்கு 'பிரண்ட் ரிக்வஸ்ட்' கொடுத்து பணம் பறிக்கும் போலி ஆசாமிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்கெல்லாம் உங்கள் போட்டோக்களை பதிவேற்றினர் என இணையத்தில் தேடி'அலர்ட்'ஆவது அவசியம்.

பிரபல நபர்களை குறிவைக்கும் போலி ஐ.டி., ஆசாமிகள் அவர்கள் போட்டோவை அவர்களின் சமூகவலைதளங்களில் இருந்து பதிவிறக்கி புதிய பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் என ஐ.டி.,க்களை உருவாக்குவர். பின் பிரபலங்களின் 'பிரண்ட் லிஸ்ட்'டில் உள்ளவர்களுக்கு போலி ஐ.டி., வைத்து 'பிரண்ட் ரிக்வஸ்ட்' கொடுப்பர். போட்டோவை பார்த்ததும் நம் நண்பர் தானே என 'ரிக்வஸ்ட் கன்பார்ம்' செய்துவிடுவர். சில நாளில் 'மெசேஞ்சர்' வழி சாட் செய்து பணம் பறிக்க வலை விரிப்பர். இந்த நேரம் நாம் நண்பருக்கு போன் செய்து 'பணம் கேட்பது உண்மையா என உறுதி செய்தால் தப்பித்தோம். இல்லை என்றால் பணம் 'அபேஸ்' தான்.


latest tamil news


ஏமாந்த பின் போலி ஐ.டி.,யை தேடினால் 'டி ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். உங்கள் சமூகவலைதள ஐ.டி., தவிர வேறு சமூகவலை தள ஐ.டி.,க்கள், இணையத்தளங்களில் உங்கள் போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளதா என இணையத்தில் தேடி கண்டறியலாம். ஸ்மார்ட் போனில் கூகுள் டெக்ஸ்டாப் வெர்சன், கம்ப்யூட்டரில் 'கூகுள்' ஒப்பன் செய்து மேலே வலது ஓரம் 'இமேஜஸ்' தேர்வு செய்தால் வழக்கமான 'சர்ச் பாக்ஸ்' வரும். அதில் இடது ஓரம் கேமரா சிம்பல் - 'அப்லோட் அன் இமேஜ்' கிளிக் செய்து ஏதாவது ஒரு உங்கள் போட்டோ அல்லது போலி ஐ.டி.,யில் பயன்படுத்தியதாக தெரியவந்த உங்கள் போட்டோவை அப்லோட் செய்யவும்.


latest tamil news


அடுத்த நொடி உங்கள் ஒரிஜினல் சமூகவலைதளம் மற்றும் உங்களுக்கே தெரியாமல் பிற தளங்களில் பயன்படுத்தப்பட்ட உங்கள் போட்டோக்களை கூகுள் காட்டிவிடும்.இதன் மூலம் உங்கள் போட்டோக்கள் கொண்ட போலி ஐ.டி.,க்களை கண்டறிந்து 'அலர்ட்'டாகி நண்பர்களையும் 'அலர்ட்' ஆக்கலாம். உதாரணத்திற்கு 'சோட்டா பீம் கார்ட்டூன்' போட்டோவை கூகுள் 'இமேஜஸ்'ல் 'அப்லோட்' செய்தோம். அந்த போட்டோ 499 முறை பல தளத்தில் இருப்பதை கூகுள் காட்டுகிறது. www.tineye.com என்ற இணையத்தளத்திலும் இது போல் தேடலாம்.


latest tamil newsஆபாச 'வீடியோ ஸ்கேமர்' உஷார்


பேஸ்புக், இன்ஸ்டாவில் புதிய நபர்களிடம் இருந்து 'பிரண்ட் ரிக்வஸ்ட்' வந்து, நீங்கள் கன்பார்ம் செய்ததும் 'சாட்' செய்து பணம் கேட்டால் நம்பாதீர். இது போன்ற போலி ஐ.டி., ஆசாமிகள் சாம்பிளுக்கு சில போட்டோக்கள் போஸ்ட் செய்திருப்பர். லைக், கமண்ட், மீச்சுவல் பிரண்ட்ஸ் பெரியளவில் இருக்காது.

தற்போது பேஸ்புக்கில் அழகிய பெண் 'ஸ்கேமர்'கள் சிலர் ஆண்களுக்கு ரிக்வஸ்ட் கொடுக்கிறார்கள். அடுத்து சாட் செய்து என் 'வீடியோ'வை இலவசமாக பார்க்கலாம் என 'வாட்ஸ் அப்' எண் அனுப்பி வீடியோ கால் செய்ய சொல்கிறார்கள். சில 'சபலிஸ்ட்'கள் கால் செய்து வீடியோவை ரசிப்பர். பெண் ஸ்கேமர் போனில் காட்டும் சபலிஸ்ட்டின் முகத்தை 'ஸ்கிரீன் ஷார்ட்' எடுத்து இணையத்தில் பரப்புவேன் என மிரட்டி பணம் பறிக்கிறார்கள். ஆண்கள் உஷாராக இல்லை என்றால் 'மானம் கப்பலேறி' விடும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X