பொது செய்தி

தமிழ்நாடு

மின் கணக்கீடு குளறுபடி கண்டித்து ராந்தல் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சேலம்: மின் கணக்கீடு குளறுபடியை கண்டித்து, மா.கம்யூ., கட்சியினர், ராந்தல் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சேலம் வடக்கு மாநகர மா.கம்யூ., கட்சி சார்பில், சாமிநாதபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலர் முருகானந்தம் தலைமை வகித்தார். அப்போது, கையில் ராந்தல் விளக்கை ஏந்தி நின்ற பலர், மின் கட்டண கணக்கீடில் குளறுபடி, வரலாறு காணாத

சேலம்: மின் கணக்கீடு குளறுபடியை கண்டித்து, மா.கம்யூ., கட்சியினர், ராந்தல் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சேலம் வடக்கு மாநகர மா.கம்யூ., கட்சி சார்பில், சாமிநாதபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலர் முருகானந்தம் தலைமை வகித்தார். அப்போது, கையில் ராந்தல் விளக்கை ஏந்தி நின்ற பலர், மின் கட்டண கணக்கீடில் குளறுபடி, வரலாறு காணாத மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்தடை, தலைவிரித்தடும் லஞ்சத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், மாநகர செயலர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், 'சாமிநாதபுரம் தனலட்சுமி அம்மாள் வீட்டுக்கு, இம்மாதம், 4,380 ரூபாய் மின்கட்டணம் நிர்ணயித்துள்ளீர். இதுவரை இல்லாதபடி கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை, 1,860 ரூபாய் கட்டியிருந்தார். ஏற்கனவே கொரோனாவால் வருமானம் இல்லாத நிலையில், அதிக மின்கட்டணம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையாக மின்கட்டணத்தை கணக்கிட்டு, பயன்படுத்திய மின்சாரத்துக்கு மட்டும், மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. அதேபோன்று, அங்கம்மாள் காலனி, ஆலமரத்துக்காடு, சின்னேரி வயல்காடு, மெய்யனூர் உள்ளிட்ட பகுதிகளில், மின்கட்டணம் அதிகமாக உள்ளதாக, 43 மனுக்கள் கொடுக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X