பொது செய்தி

தமிழ்நாடு

எரிவாயு குழாய்களை பதிக்க எதிர்ப்பு; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த எர்ரப்பட்டியில், கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து, தமிழகத்தில் கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட, ஏழு மாவட்டங்கள் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு எரிவாயு கொண்டு செல்ல கெயில்நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக, விவசாய

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த எர்ரப்பட்டியில், கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து, தமிழகத்தில் கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட, ஏழு மாவட்டங்கள் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு எரிவாயு கொண்டு செல்ல கெயில்நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக, விவசாய நிலம் வழியாக குழாய் பதிப்பதால், இத்திட்டத்துக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிறுத்தப்பட்டிருந்த பணிகளை, மீண்டும் கெயில் நிறுவனம் துவக்கி உள்ளது. இந்நிலையில், பாலக்கோடு, எர்ரப்பட்டியில் கெயில் நிறுவனம் சேமிப்பு கிடங்கில் எரிவாயு குழாய்களை இறக்கி வைத்து, பணி துவங்க ஏற்பாடு நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட, ஏழு மாவட்டத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று எர்ரப்பட்டியில் உள்ள எரிவாயு குழாய் சேமிப்பு கிடங்கு முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், விவசாயிகளிடம் மனுவை பெற்றுவிட்டு, எதுவும் கூறாமல் சென்றார். இதனால், விவசாயிகள் திரண்டு, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள் எரிவாயு குழாய்களை, இனி அப்பகுதியில் இறக்க அனுமதிக்க மட்டோம் என கூறியதையடுத்து, கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X