மயான வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த கோபிசெட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட, பாப்பிசெட்டிப்பட்டியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை, அரூர்-கடத்தூர் சாலையோரத்தில், அடக்கம் செய்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே அடக்கம் செய்த இடத்தில், மீண்டும் சடலங்களை அடக்கம் செய்யும் நிலையுள்ளது. மயான வசதி கோரி, இப்பகுதி

அரூர்: அரூர் அடுத்த கோபிசெட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட, பாப்பிசெட்டிப்பட்டியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை, அரூர்-கடத்தூர் சாலையோரத்தில், அடக்கம் செய்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே அடக்கம் செய்த இடத்தில், மீண்டும் சடலங்களை அடக்கம் செய்யும் நிலையுள்ளது. மயான வசதி கோரி, இப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், மயானத்துக்கு இடம் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X