தேர்வு நடந்திருந்தால் கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வு நடந்திருந்தால் கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும்

Added : ஜூலை 20, 2021
Share
தர்மபுரி: பிளஸ் 2 வகுப்புக்கு முறையான வகுப்புக்கள், தேர்வுகள் நடத்திருந்தால் கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும் என, மாணவியர் கூறினர்.எஸ்.மகாஸ்ரீ, ஆட்டுகாரன்பட்டி: கொரோனா தொற்று பரவலால் பள்ளிக்கு செல்ல முடியாத, தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்ட போதும், அதிக மதிப்பெண் கிடைக்கும் என, நம்பிக்கை இருந்தது. ஆனால், எனக்கு, 490 மதிப்பெண் மட்டும் கிடைத்துள்ளது. இம்ரூமெண்ட்

தர்மபுரி: பிளஸ் 2 வகுப்புக்கு முறையான வகுப்புக்கள், தேர்வுகள் நடத்திருந்தால் கூடுதல் மதிப்பெண் கிடைத்திருக்கும் என, மாணவியர் கூறினர்.


எஸ்.மகாஸ்ரீ, ஆட்டுகாரன்பட்டி: கொரோனா தொற்று பரவலால் பள்ளிக்கு செல்ல முடியாத, தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்ட போதும், அதிக மதிப்பெண் கிடைக்கும் என, நம்பிக்கை இருந்தது. ஆனால், எனக்கு, 490 மதிப்பெண் மட்டும் கிடைத்துள்ளது. இம்ரூமெண்ட் தேர்வுக்கு, என் பெற்றோரின் ஆலோசனை பெற்று விண்ணப்பிக்க உள்ளேன்.


எம்.சபிதா, பாப்பிரெட்டிப்பட்டி: பிளஸ் 2 தேர்வு நடக்காத போதும் நேற்று வெளியான தேர்வு முடிவில் எனக்கு, 529 மதிப்பெண் கிடைத்தற்கு, ஆசிரியர்களின் தொடர் பங்களிப்பே காரணம். தேர்வு நடந்திருந்தால் இதை விட கூடுதலாக மதிப்பெண் பெற்றிருப்பேன், என்ற நம்பிக்கை உள்ளது.


எஸ்.அறிவுமதி, ரேகடஹள்ளி: ஆன்லைன் வகுப்புகளும், மொபைல் டவர் உள்ளிட்ட பிரச்னைகளால் என்னை போன்ற கிராம பகுதி மாணவர்களுக்கு முழுமையாக கிடைப்பதில் சிரமம் இருந்தது. தேர்வு முடிவில், 496 மதிப்பெண் கிடைத்திருப்பது முழுமையாக இல்லா விட்டாலும், ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


எஸ்.அஜய் சரவணன், தொட்டம்பட்டி, அரூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில், 586.45 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். தேர்வு நடந்திருந்தால், கூடுதலாக மதிப்பெண் பெற்றிருப்பேன். மீண்டும், தேர்வு எழுத விருப்பமில்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க விரும்புகிறேன்.


ஜி.திவாகர், சின்னாங்குப்பம், அரூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில், 522 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வு நடந்திருந்தால் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருப்பேன். மீண்டும், தேர்வு எழுத விருப்பமில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X