பொது செய்தி

தமிழ்நாடு

இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த பண்ணப்பட்டி இருளர் காலனியில், போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையேயான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட, எஸ்.பி.,கலைச்செல்வன் தலைமை வகித்தார். சேலம் டி.ஐ.ஜி., மகேஸ்வரி, இருளர் இன மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, கொரோனா காலத்தில் வருமானமின்றி தவித்து வந்த பண்ணவாடியை சேர்ந்த, 75 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த பண்ணப்பட்டி இருளர் காலனியில், போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையேயான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட, எஸ்.பி.,கலைச்செல்வன் தலைமை வகித்தார். சேலம் டி.ஐ.ஜி., மகேஸ்வரி, இருளர் இன மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, கொரோனா காலத்தில் வருமானமின்றி தவித்து வந்த பண்ணவாடியை சேர்ந்த, 75 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள கைத்தொழில் தேவையெனில், போலீசார் மூலமாக தொழில் தொடங்க, தர்மபுரி மாவட்ட காவல் துறை துணையாக இருக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் புகார் மற்றும் மருத்துவ உதவிக்கு இலவச எண்ணான, 181ஐ தொடர்பு கொள்ளலாம். இங்குள்ள குழந்தைகள் அனைவரையும் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்,'' என்றார். பென்னாகரம் டி.எஸ்.பி., சவுந்திரராஜன், இன்ஸ் பெக்டர்கள் தண்டபானி, தொல்காப்பியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X