மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
தர்மபுரி: மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி, கலெக்டர் அலுவலகம் அருகே, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி., தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், மாநில துணைத்தலைவர் ஜீவா தலைமை

தர்மபுரி: மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி, கலெக்டர் அலுவலகம் அருகே, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி., தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், மாநில துணைத்தலைவர் ஜீவா தலைமை வகித்தார். திட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில், மின்சார சட்ட திருத்த மசோதா, 2021ஐ திரும்பப்பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்கினால், மின் கட்டணம் பலமடங்கு உயர வாய்ப்புள்ளது. மேலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காது. எனவே, இச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதேபோன்று கிருஷ்ணகிரியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X