ஏரியில் சீமை கருவேல மரங்கள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் ஏரியில், ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்த நிலையில், மழைக்காலத்திலும் இந்த ஏரிக்கு மிக குறைந்தளவு மட்டும் தண்ணீர் வந்ததால், இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விவசாயிகளின் கோரிக்கையின்படி கடந்த ஓராண்டுக்கு முன், கிருஷ்ணாபுரம் ஏரி குடிமராமத்து திட்டத்தில், ஏரியில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் ஏரியில், ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்த நிலையில், மழைக்காலத்திலும் இந்த ஏரிக்கு மிக குறைந்தளவு மட்டும் தண்ணீர் வந்ததால், இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விவசாயிகளின் கோரிக்கையின்படி கடந்த ஓராண்டுக்கு முன், கிருஷ்ணாபுரம் ஏரி குடிமராமத்து திட்டத்தில், ஏரியில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு தூர்வாரி, வாய்க்கால் சீரமைக்கப்பட்டது. இதனால், ஏரிக்கு நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், கடந்தாண்டு இந்த ஏரியில் வேகமாக சீமை கருவேல மரங்கள் வளர்ந்தன. தற்போது மழை பெய்து வரும் நிலையில், ஏரியிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மழைக்காலங்களில், இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் முழுமையாக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏரி பாசன பகுதி விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X