ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி: எஸ்.பி., அலுவலகத்தில் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி: எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

Added : ஜூலை 20, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரை சேர்ந்த மக்கள், நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: கோடியூரை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர், சந்தூரில் தையல் கடை நடத்தி வந்தார். அவரிடம், 100க்கும் மேற்பட்டவர்கள் மாத ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர். ஆனால் அவர், கடந்த ஜன.,ல் இருந்து சீட்டு நடத்தவில்லை. ஏலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரை சேர்ந்த மக்கள், நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: கோடியூரை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர், சந்தூரில் தையல் கடை நடத்தி வந்தார். அவரிடம், 100க்கும் மேற்பட்டவர்கள் மாத ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர். ஆனால் அவர், கடந்த ஜன.,ல் இருந்து சீட்டு நடத்தவில்லை. ஏலம் எடுத்தவர்களுக்கு பணமும் வழங்கவில்லை. இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்ததால், அவர் நேரடியாக வந்து பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால், பணம் தராமல் தலைமறைவாகி விட்டார். சீட்டு முடியும் நிலையில், பல லட்சம் ரூபாய் கட்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே, கோவிந்தசாமியிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X