பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், குறுவள மையத்திற்கு உட்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. 20 மாணவ, மாணவியர் பங்கேற்ற நிலையில், ஆறு பேர் பரிசுகளை வென்றனர். முதல் பரிசாக மாணவர் வேணு, மாணவி சவுமியா ஆகியோருக்கு, டேப்லெட் வழங்கப்பட்டது. இரண்டாம்

ஓசூர்: சூளகிரி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், குறுவள மையத்திற்கு உட்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. 20 மாணவ, மாணவியர் பங்கேற்ற நிலையில், ஆறு பேர் பரிசுகளை வென்றனர். முதல் பரிசாக மாணவர் வேணு, மாணவி சவுமியா ஆகியோருக்கு, டேப்லெட் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக மாணவர்கள் ரகுபதி, சந்துருக்கு மொபைல்போன்களும், மூன்றாம் பரிசாக மாணவிகள் அபிதா, மானசா ஆகியோருக்கு, சயின்டிபிக் கால்குலேட்டரும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சாய்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் ஜெய்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஆசிரியர் பயிற்றுனர் வைத்தியநாதன், ஆசிரியை ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X