பொது செய்தி

தமிழ்நாடு

வாஜ்பாய்க்கு முழு உருவ சிலை அமைக்க வலியுறுத்தி தீர்மானம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், கிழக்கு மாநகர, பா.ஜ., செயற்குழு கூட்டம், மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாநகர தலைவர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் விஜயகுமார் பேசினர். கூட்டத்தில், ஓசூர், சீத்தாராம் நகர் சர்க்கிள் பகுதியில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, முழு உருவச்சிலை அமைக்க வேண்டும். ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில்

ஓசூர்: ஓசூர், கிழக்கு மாநகர, பா.ஜ., செயற்குழு கூட்டம், மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாநகர தலைவர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் விஜயகுமார் பேசினர். கூட்டத்தில், ஓசூர், சீத்தாராம் நகர் சர்க்கிள் பகுதியில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, முழு உருவச்சிலை அமைக்க வேண்டும். ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் மலையை சுற்றி, கிரிவலப்பாதை அமைக்க வேண்டும். ஓசூர், தேர்ப்பேட்டை சூடவாடி அரசு பள்ளி அருகே உள்ள, அடுக்குமாடி குடியிருப்புகளை முறையாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஓசூர் ஆர்.வி., அரசு மேல்நிலைப்பள்ளி, சீனிவாச தியேட்டர் அருகே, வேகத்தடை அமைக்க வேண்டும், என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., கட்சி செயற்குழு கூட்டம், ராயக்கோட்டையிலுள்ள தனியார் பள்ளியில் நடந்தது. மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் பேசினார். கூட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் கொண்டு செல்வது, கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X