பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கினால் சாதிப்போம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பிளஸ் 2 தேர்வில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்கள் கூறியதாவது:கே.திரிஷா, பில்லனகுப்பம்: கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து, 600க்கு, 509 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வு நடத்தியிருந்தால் இன்னும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பேன். டாக்டராக வேண்டும் என்பதே கனவு.கே.பவித்ரா, கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 தேர்வில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்கள் கூறியதாவது:

கே.திரிஷா, பில்லனகுப்பம்: கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து, 600க்கு, 509 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வு நடத்தியிருந்தால் இன்னும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பேன். டாக்டராக வேண்டும் என்பதே கனவு.


கே.பவித்ரா, கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து, இங்கேயே நீட் பயிற்சியும் பெற்றேன். நான், 600க்கு 536 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். நீட் தேர்வில் தோல்வியுற்றால், பி.எஸ்சி., கார்டியாலிஸ்ட் படிக்க ஆர்வமுள்ளது.


ஏ.முபசீரா, கிருஷ்ணகிரி: நான், 600க்கு, 485 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கொரோனா காலத்தில் எங்களது தேர்வுகள் நடக்கவில்லை. மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கினால், சாதிப்போம். நான், பி.எஸ்சி., கணிதம் படிக்கவுள்ளேன்.


மணிஷா, சூளகிரி: குந்தாரப்பள்ளியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து, 600க்கு, 531 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். ஆன்லைன் கிளாசில் படித்ததால், சரியான முறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, செயல்முறை தேர்வை எழுதமுடியவில்லை. நேரடி வகுப்புகள் இருந்திருந்தால் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் நேருக்கு நேர் கேட்டு, இன்னும் சிறப்பான மதிப்பெண்களை பெற்றிருக்கலாம்.


பி.ரவிசங்கர், ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, 600க்கு, 352 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளேன். கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் நடக்காததால், பாடங்களில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க உள்ளேன்.


தனுஷ், கருப்பங்குட்டை: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன், 600க்கு, 419 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வு நடத்தியிருந்தால் மதிப்பெண்கள் அதிகம் பெற்றிருப்பேன். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்காததால் மதிப்பெண்கள் குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X