பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 'ஆல்பாஸ்'

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தாக்கத்தால் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 10, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வு முடிவுகளை வைத்து, தேர்ச்சியும், மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.


இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தாக்கத்தால் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 10, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வு முடிவுகளை வைத்து, தேர்ச்சியும், மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு கல்வி மாவட்டங்களிலுள்ள, 82 தேர்வு மையங்களில், 192 பள்ளிகளை சேர்ந்த, 20 ஆயிரத்து, 348 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதில் 10 ஆயிரத்து, 493 மாணவியரும், 9,855 மாணவர்களும் அடங்குவர். மொத்தமுள்ள, 192 மேல்நிலைப்பள்ளியில், 104 அரசு பள்ளி, ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் 87 தனியார் பள்ளிகளும் அடங்கும். அதேபோல் மொத்தமுள்ள மாணவர்களில், 13 ஆயிரத்து, 999 அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும், 6,349 தனியார் பள்ளி மாணவர்களும் அடங்குவர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, தேர்வு, செய்முறை தேர்வு அடிப்படையில் மதிபெண்கள் வழங்கப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X