சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி விவசாயி பலி; தந்தை, மகன் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வம்பலூரை சேர்ந்தவர் முரளி, 31, விவசாயி; கடந்த, 15ல், இரவு முரளி மணல் கடத்தியபோது, அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, தப்பி ஓடியவர் மின்வேலியில் சிக்கி, மண்ட கொளத்தூர் செய்யாற்றங்கரை யில் உயிரிழந்து கிடந்தார். போளூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அப்பகுதியில் விவசாயம் செய்யும் பாலசுந்தரம், 59, அவரது மகன் சிவக்குமார், 30,

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வம்பலூரை சேர்ந்தவர் முரளி, 31, விவசாயி; கடந்த, 15ல், இரவு முரளி மணல் கடத்தியபோது, அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, தப்பி ஓடியவர் மின்வேலியில் சிக்கி, மண்ட கொளத்தூர் செய்யாற்றங்கரை யில் உயிரிழந்து கிடந்தார். போளூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அப்பகுதியில் விவசாயம் செய்யும் பாலசுந்தரம், 59, அவரது மகன் சிவக்குமார், 30, ஆகியோர் பயிர்களை நாசம் செய்யும் காட்டுன்றிகளை கட்டுப்படுத்த, அனுமதியின்றி வைத்திருந்த மின்வேலியில் சிக்கி முரளி பலியானது தெரியவந்தது. மறுநாள் காலை சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலசுந்தரம், சிவக்குமார் ஆகியோர் தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க, முரளி சடலத்தை ஆற்றங்கரை அருகே வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலசுந்தரம், அவரது மகன் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X