பொது செய்தி

தமிழ்நாடு

சார் - பதிவாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருச்சி: ''அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்தால், சார் - பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். திருச்சியில் அவர் அளித்த பேட்டி: வணிகர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வியாபாரிகள் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலே செய்யாமல்

திருச்சி: ''அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்தால், சார் - பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். திருச்சியில் அவர் அளித்த பேட்டி: வணிகர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வியாபாரிகள் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலே செய்யாமல் ஜி.எஸ்.டி., எண் வாங்கி வைத்திருக்கும் போலி வியாபாரிகளுக்கு தவறான பாதை காட்டும் அதிகாரிகள் யாராக இருந்தாலும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப்பதிவுத் துறையில், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பதிவு செய்யப்படாது. அரசு உத்தரவை மீறி, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்த சார் - பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X