ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18,200 கன அடியாக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18,200 கன அடியாக அதிகரிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 18 ஆயிரத்து, 200 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, உத்தர கன்னடா, ஹாசன் மற்றும் கேரளா மாநிலம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து

ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 18 ஆயிரத்து, 200 கன அடியாக அதிகரித்துள்ளது.


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, உத்தர கன்னடா, ஹாசன் மற்றும் கேரளா மாநிலம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 20 ஆயிரத்து, 426 கன அடி தண்ணீர், காவிரியில் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, 15 ஆயிரத்து, 526 கன அடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 18 ஆயிரம் கன அடியாகவும், மாலை 5:00, மணிக்கு, 18 ஆயிரத்து, 200 கன அடியாகவும் அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X