அந்தியூரில் கட்டடம் இடிந்து விழுந்து மூன்று பேர் பலி; மூவர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அந்தியூரில் கட்டடம் இடிந்து விழுந்து மூன்று பேர் பலி; மூவர் படுகாயம்

Added : ஜூலை 20, 2021
Share
அந்தியூர்: அந்தியூரில், கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்து மூன்று பேர் பலியாகினர். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். கொரோனா காரணமாக, மூன்று மாதங்களாக நடக்காமல் இருந்து வந்த வாரச்சந்தை நேற்று தான் கூடியது. பர்கூர் விவசாயிகள், தங்கள் தோட்டத்தில் விளைந்த பொருட்களை, அந்தியூர் சந்தையில் விற்பனை செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை

அந்தியூர்: அந்தியூரில், கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்து மூன்று பேர் பலியாகினர். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். கொரோனா காரணமாக, மூன்று மாதங்களாக நடக்காமல் இருந்து வந்த வாரச்சந்தை நேற்று தான் கூடியது. பர்கூர் விவசாயிகள், தங்கள் தோட்டத்தில் விளைந்த பொருட்களை, அந்தியூர் சந்தையில் விற்பனை செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை இரவே அந்தியூர் வந்து சாலையோரம், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலை சந்தையில் விற்பனை செய்வர். இதேபோல் நேற்று முன்தினம் அந்தியூர், தேர்வீதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை முன்புறம், ஆறு பேர் இரவில் தூங்கி கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் கடையின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்ப்பதற்குள், கட்டட இடிபாடுகளில் சிலர் சிக்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை அந்தியூர் தீயணைப்பு துறையினர், போலீசார் இரண்டு மணி நேரம் போராடி மீட்டனர். இதில் பர்கூர் அருகே தட்டக்கரையை சேர்ந்த சித்தன், 55, சின்னசெங்குளத்தை சேர்ந்த மாதேவன், 55, சின்னபையன், 35, ஆகிய மூவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். கொங்காடையை சேர்ந்த சிவமூர்த்தி, 45, சின்னசெங்குளத்தை சேர்ந்த ராஜேஷ், 30, மகேந்திரன், 17, படுகாயமடைந்தனர். இவர்கள் அந்தியூர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், 'மிகவும் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால், மூன்று பேர் பலியாகி உள்ளனர். கட்டட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X