பொது செய்தி

தமிழ்நாடு

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டாலும் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கரூர்: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.கொரோனா பரவல் பிரச்னையால், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்றி மதிப்பெண் வழங்கும் முறையின்படி, முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.சிவசங்கர், தமிழில், 93.39, ஆங்கிலம், 91.39, இயற்பியல், 93.93, வேதியியல், 91.36,

கரூர்: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.


கொரோனா பரவல் பிரச்னையால், பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்றி மதிப்பெண் வழங்கும் முறையின்படி, முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.சிவசங்கர், தமிழில், 93.39, ஆங்கிலம், 91.39, இயற்பியல், 93.93, வேதியியல், 91.36, கணிதம், 87.39, கணிப்பொறியியல், 94.50 என மொத்தம், 551.96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சூழலிலும், அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து, அவரது தந்தை, சவுந்தர்ராஜன் கூறியதாவது: என் மகன், ஹெமிபேஷியல் மைக்ரோசோமியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முக பகுதியில் எலும்பு, தசை வளர்ச்சி இருக்காது. இதை சரி செய்ய ஆறு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஓரளவு பேச முடியும். மற்றவர்களை போல சரளமாக பேச முடியாது. இன்னும், இரண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. ஆனாலும் நன்றாக படித்து வந்தார். கடந்த, 10ம் வகுப்பு தேர்வில், 456 மதிப்பெண்கள் பெற்றார். தற்போது பிளஸ் 2 தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார். உடலில் பல பிரச்னை இருந்த போதும் கூட, அதை தாங்கி கொண்டு வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசின் எந்த உதவியும் கிடையாது. இவ்வாறு, அவர் கூறினார். மாணவனை, பள்ளி தலைமையாசிரியர் ரேவதி உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X