பொது செய்தி

தமிழ்நாடு

முருங்கைக்காய்க்கு ஆதரவு விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் விளையும் முருங்கைக்காய்க்கு, வரும் காலங்களில் போதிய ஆதரவு விலை கிடைக்குமா என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான ஊத்தூர், அரிக்காரன்வலசு, கோவிலூர், மார்க்கம்பட்டி, ஈசநத்தம், வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் விளையும் முருங்கைக்காய்க்கு, வரும் காலங்களில் போதிய ஆதரவு விலை கிடைக்குமா என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான ஊத்தூர், அரிக்காரன்வலசு, கோவிலூர், மார்க்கம்பட்டி, ஈசநத்தம், வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்துள்ளனர். அப்பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஏற்பட்ட காலநிலை மாறுபாட்டால், முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். கொரோனா தாக்குதல்,போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் வியாபாரிகள் முருங்கைக்காயை அதிகமாக கொள்முதல் செய்வதை தவிர்த்து வந்தனர்.

இதுகுறித்து முருங்கை வியாபாரிகள் கூறியதாவது; தற்போது நிலவிவரும் சூழ்நிலையில், ஓரளவு விவசாயிகளிடம் இருந்து சீரான வர்த்தகம் இருந்து வருகிறது. கடந்த வாரம் மர முருங்கைகாய் கிலோ, 10 ரூபாய், செடி முருங்கைகாய், 13 ரூபாய், கருமுருங்கைகாய், 18 ரூபாய்க்கு விலை போனது. கூலியாட்கள் மூலம் பறித்து விற்பனைக்கு கொண்டு வந்தால், செலவிற்கு கூட வராததால் விவசாயிகள் பலர், காயை பறிக்காமல் விட்டு மரத்திலேயே காயும் சூழல் ஏற்பட்டது. தற்போது சிறிதளவு விலை ஏற்றத்துடன் மர முருங்கைகாய் கிலோ, 12 ரூபாய், செடி முருங்கைகாய், 20 ரூபாய், கருமுருங்கைகாய், 25 ரூபாய்க்கு விலை போகிறது. வரும் நாட்களில் விவசாயிகளுக்கு ஓரளவு ஆதரவு விலை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X