சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளின் விபரீத முடிவால் மகனை கொன்று தாய் தற்கொலை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம், 50; வேன் டிரைவர். இவரது மனைவி அம்சவேணி, 42; மகள்கள், பிரியா, 19, திரிஷா, 17, மகன் விஷ்ணு, 13. பிரியாவுக்கு அடுத்த மாதம், 21ல் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், பிரியாவும், அதே கிராமத்தை சேர்ந்த திருப்பதி, 19, என்ற வாலிபரும் ஏற்கனவே காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த அம்சவேணி,

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம், 50; வேன் டிரைவர். இவரது மனைவி அம்சவேணி, 42; மகள்கள், பிரியா, 19, திரிஷா, 17, மகன் விஷ்ணு, 13. பிரியாவுக்கு அடுத்த மாதம், 21ல் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், பிரியாவும், அதே கிராமத்தை சேர்ந்த திருப்பதி, 19, என்ற வாலிபரும் ஏற்கனவே காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த அம்சவேணி, நேற்று முன்தினம் பிரியாவை கண்டித்துள்ளார். இதை, திருப்பதிக்கு போனில் பிரியா தெரிவித்துள்ளார். இதனால் இருவரும், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அவரவர் வீட்டில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இருவரையும் உறவினர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மகளின் நடவடிக்கையால் மனமுடைந்த அம்சவேணி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு மகள் திரிஷா, மகன் விஷ்ணு ஆகியோருடன் வீட்டின் அருகே உள்ள, விவசாய கிணற்றில் குதித்துள்ளார். அப்போது, பாறையில் மோதி அம்சவேணிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. சிறுவன் விஷ்ணு, நீச்சல் தெரியாமல் தத்தளித்தபோது, அவரை அம்சவேணி நீரில் அழுத்தியதில், அவர் மூச்சுத்திணறி இறந்தார். பின், திரிஷாவையும் நீரில் அழுத்தியபோது, கிணற்று மோட்டார் பைப்பை, திரிஷா இறுக்க பிடித்துக்கொண்டார். அப்போது மயக்கமடைந்த அம்சவேணி நீரில் மூழ்கினார். நேற்று அதிகாலை சிறுமி திரிஷாவின் கூச்சலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து, போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினரின் உதவியோடு சிறுமியை மீட்டனர். அம்சவேணி மற்றும் விஷ்ணுவை சடலமாக மீட்டனர். மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X