பொது செய்தி

தமிழ்நாடு

'மிரர் இமேஜ்' எழுதி சாதித்தவருக்கு நான்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில் வசிக்கும் தனியார் நிறுவன மேலாளார், பின்வரிசையில், 'மிரர் இமேஜ்' எழுதி சாதித்துள்ளார். அவருக்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் கணேசன், 52; ஓவியர். கடந்த, 32 ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வந்த அவர், மத்தம் அக்ரஹாரம் சாலையிலுள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில்

ஓசூர்: ஓசூரில் வசிக்கும் தனியார் நிறுவன மேலாளார், பின்வரிசையில், 'மிரர் இமேஜ்' எழுதி சாதித்துள்ளார். அவருக்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் கணேசன், 52; ஓவியர். கடந்த, 32 ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வந்த அவர், மத்தம் அக்ரஹாரம் சாலையிலுள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபாஷினி, 42, இவர்களுக்கு சுபனேஷ், 25, என்ற மகனும், மீனாட்சி ஸ்வேதா, 22, என்ற மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன், 'யு டியூப்'பில் வாலிபர் ஒருவர், பின்வரிசையில் ஒரு நிமிடத்தில், 20 வார்த்தைகளை எழுதியதை பார்த்தார். அதுபோல் தானும் எழுத முடிவு செய்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய, 'அக்னி சிறகுகள்' என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பான, 'விங்க்ஸ் ஆப் பையர்' என்ற புத்தகத்தை, கண்ணாடியில் பார்த்து படிக்கும் வகையில், பின்வரிசையில், மிரர் இமேஜாக எழுத துவங்கினார். தினமும் வேலை முடிந்து வந்து, இரவில் ஒரு நாளைக்கு, மூன்று முதல் நான்கு பக்கங்கள் என, 200 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை, 45 நாட்களில் மிரர் இமேஜாக எழுதி முடித்தார். இதை பாராட்டும் வகையில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட், கலாம் வேல்டு ரெக்கார்ட், பிரேவோ வேல்டு ரெக்கார்ட், இன்டர்நேஷனல் அச்சுவ்மெண்ட் இந்தியா அவார்டு ஆகியவற்றின் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். இவரை, ஓசூர், தி.மு.க.,எம்.எல்.ஏ., பிரகாஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X