பொது செய்தி

தமிழ்நாடு

பெருங்கற்காலத்தை சேர்ந்த 4 பானைகள்: மயிலாடும்பாறை அகழாய்வில் கண்டுபிடிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மயிலாடும்பாறை அகழாய்வில், பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய, நான்கு பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில், மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என, 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகிலுள்ள மயிலாடும்பாறையில்,

கிருஷ்ணகிரி: மயிலாடும்பாறை அகழாய்வில், பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய, நான்கு பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில், மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என, 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகிலுள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம், தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து, அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது: மயிலாடும்பாறை சானரப்பன் மலையில், மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 100க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன. கடந்த, 1980 மற்றும் 2003ல் நடந்த ஆய்வுகளில், அவை புதிய கற்காலத்தை சேர்ந்தவை என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மூன்று மாத ஆய்வில், ஏற்கனவே பெருங்கற்காலத்தை சேர்ந்த, 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும், தற்போது அதே பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகிறது. என்றாலும், பானைகளை ஆய்வுக்கு அனுப்பிய பிறகே, அதன் சரியான காலத்தை கணிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X