பொது செய்தி

தமிழ்நாடு

கோமாவில் உள்ள மகனுக்கு நிதியுதவி இலவச வீட்டுமனை கேட்டு பெண் தர்ணா

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கோமாவிலுள்ள மகனுக்கு நிதியுதவியும், இலவச வீட்டு மனையும் கேட்டு, பெண், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 38, கூலித்தொழிலாளி; இவரது மனைவி மஞ்சுளா, 36; இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ஹரி, 16, கடந்த, 2018ல் நடந்த சாலைவிபத்தில், தலையில் அடிப்பட்டு கோமா நிலையில் உள்ளார். அவருக்கு, வயிற்றிலுள்ள

கிருஷ்ணகிரி: கோமாவிலுள்ள மகனுக்கு நிதியுதவியும், இலவச வீட்டு மனையும் கேட்டு, பெண், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 38, கூலித்தொழிலாளி; இவரது மனைவி மஞ்சுளா, 36; இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ஹரி, 16, கடந்த, 2018ல் நடந்த சாலைவிபத்தில், தலையில் அடிப்பட்டு கோமா நிலையில் உள்ளார். அவருக்கு, வயிற்றிலுள்ள குழாய் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. இதனால், மகனின் பராமரிப்பு செலவுக்கு அரசு நிதி வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என கடந்த, நான்கு ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் நேற்று, மஞ்சுளா கோமாவிலுள்ள மகனுடன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மஞ்சுளாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாசில்தார் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க, உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, மஞ்சுளா அங்கிருந்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X