பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல் டவர் இல்லாத பரிதாபம்; நீர் தேக்க தொட்டியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: மொபைல்போன் டவர் இல்லாததால், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது அமர்ந்து மாணவர்கள் பாடம் படிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஊனந்தாங்கல் பஞ்., வரகூர் கோம்பை, செக்கிடி, கரியாம்பட்டி கிராமங்கள் கொல்லிமலையில் அடிவாரத்தில் அமைந்துள்ளன. இதனால், இங்கு எந்த மொபைல்போன் சிக்னலும் கிடைப்பதில்லை. உயரமான

நாமகிரிப்பேட்டை: மொபைல்போன் டவர் இல்லாததால், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது அமர்ந்து மாணவர்கள் பாடம் படிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஊனந்தாங்கல் பஞ்., வரகூர் கோம்பை, செக்கிடி, கரியாம்பட்டி கிராமங்கள் கொல்லிமலையில் அடிவாரத்தில் அமைந்துள்ளன. இதனால், இங்கு எந்த மொபைல்போன் சிக்னலும் கிடைப்பதில்லை. உயரமான பகுதிக்கு சென்றுதான் பேசமுடியும். அதுவும் விட்டு, விட்டுதான் கேட்கும். தற்போது, ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே வகுப்பு நடக்கிறது. சிக்னல் கிடைக்காததால் இப்பகுதி மாணவர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி ஆபத்தான சூழலில், ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த பகுதிக்கு மொபைல்போன் சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X