முட்டை விலை 515 காசாக நிர்ணயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முட்டை விலை 515 காசாக நிர்ணயம்

Added : ஜூலை 20, 2021
Share
நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 505 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 10 காசு உயர்த்தி, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை நுகர்வு அதிகரித்து வருவதால், அதன் கொள்முதல்

நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 505 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 10 காசு உயர்த்தி, 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை நுகர்வு அதிகரித்து வருவதால், அதன் கொள்முதல் விலையும், நான்கு நாட்களில், 35 காசு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 530, ஐதராபாத், 496, விஜயவாடா, 499, பர்வாலா, 490, மும்பை, 553, மைசூரு, 520, பெங்களூரு, 520, கோல்கட்டா, 550, டில்லி, 510. கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையை, ஐந்து ரூபாய் உயர்த்தி, 85 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை, மூன்று ரூபாய் உயர்த்தி, 133 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X