பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் வழித்தடம் 25 நாட்களில் 100 அதிகரிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சேலம்: அரசு பஸ் வழித்தட எண்ணிக்கை, 25 நாளில், 100 அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகம், 322 பணிமனை மூலம், 20 ஆயிரத்து, 185 பஸ்கள் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டன. டீசல் விலை உயர்வு, கிராம சேவையில் வருவாய் பாதிப்பால், பல தடங்களில் இயக்கிய பஸ்களை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். கடந்த மே மாதம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து அமைச்சராக பதவியேற்ற ராஜ

சேலம்: அரசு பஸ் வழித்தட எண்ணிக்கை, 25 நாளில், 100 அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகம், 322 பணிமனை மூலம், 20 ஆயிரத்து, 185 பஸ்கள் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டன. டீசல் விலை உயர்வு, கிராம சேவையில் வருவாய் பாதிப்பால், பல தடங்களில் இயக்கிய பஸ்களை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். கடந்த மே மாதம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து அமைச்சராக பதவியேற்ற ராஜ கண்ணப்பன், 'அரசு பஸ்களின் தடங்கள் அதிகரிக்கப்படும்; நிறுத்தப்பட்ட கிராமங்களுக்கு சேவை தொடங்கப்படும்' என அறிவித்தார். ஊரடங்கில் தளர்வால், கடந்த ஜூன், 27ல் தமிழகம் முழுதும் அரசு பஸ்களின் இயக்கம் தொடங்கியது. அதேநேரம், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், தி.மு.க., மாவட்ட செயலர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளால், 25 நாளில், 100 புது தடங்களில் அரசு பஸ்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு வழித்தட எண்ணிக்கை, 20 ஆயிரத்து, 120 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X