பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பால சுவரில் விளம்பரம்: நெடுஞ்சாலைத்துறை தடை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வீரபாண்டி: நெடுஞ்சாலை மேம்பால சுவரில் விளம்பரம், சுவரொட்டிகள் ஒட்ட, தேசிய நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது. சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, உத்தமசோழபுரம் மேம்பால தடுப்புச்சுவர் உள்ளிட்ட மேம்பால சுவர்கள், தடுப்புச்சுவர்களில், அரசியல் கட்சி, அமைப்புகள் சார்பில் விளம்பரங்கள், பிறந்தநாள் வாழ்த்து, மாநாடு குறித்த அறிவிப்புகளை எழுதி வைத்தனர். கடந்த சட்டசபை தேர்தலால்,

வீரபாண்டி: நெடுஞ்சாலை மேம்பால சுவரில் விளம்பரம், சுவரொட்டிகள் ஒட்ட, தேசிய நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது. சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, உத்தமசோழபுரம் மேம்பால தடுப்புச்சுவர் உள்ளிட்ட மேம்பால சுவர்கள், தடுப்புச்சுவர்களில், அரசியல் கட்சி, அமைப்புகள் சார்பில் விளம்பரங்கள், பிறந்தநாள் வாழ்த்து, மாநாடு குறித்த அறிவிப்புகளை எழுதி வைத்தனர். கடந்த சட்டசபை தேர்தலால், அரசு சுவர்களில் வரையப்பட்டிருந்த கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், மேம்பால சுவரில் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அச்சடித்துள்ளன. இருப்பினும், தடை அறிவிப்பை சுற்றி, வி.சி., கட்சி சார்பில் காயத்ரி பெயரில் விளம்பரம் செய்ய முன்பதிவு செய்யப்பட்டு, அம்புக்குறி இடப்பட்டுள்ளது. அதனால், தடையை மீறி விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, சுற்றுச்சூழல், கொரோனா விழிப்புணர்வு, சேலத்தின் பெருமைகள் உள்ளிட்டவை குறித்த ஓவியங்களை மேம்பால சுவரில் வரைந்து பொலிவுபடுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X