பொது செய்தி

தமிழ்நாடு

பதவி உயர்வு எப்போது? 300 இன்ஸ்பெக்டர் தவிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சேலம்: பதவி உயர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் தவித்து வருகின்றனர்.தமிழக போலீசில், 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் இன்ஸ்பெக்டர்களுக்கு, டி.எஸ்.பி., பதவி உயர்வு அளிக்க வேண்டும். அதற்கான பட்டியல், 2020 - 21ல் இதுவரை தயார்செய்யப்படவில்லை. கடந்தாண்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 88 டி.எஸ்.பி.,க்கள்

சேலம்: பதவி உயர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் தவித்து வருகின்றனர்.


தமிழக போலீசில், 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் இன்ஸ்பெக்டர்களுக்கு, டி.எஸ்.பி., பதவி உயர்வு அளிக்க வேண்டும். அதற்கான பட்டியல், 2020 - 21ல் இதுவரை தயார்செய்யப்படவில்லை. கடந்தாண்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 88 டி.எஸ்.பி.,க்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, அதே ஆண்டு, செப்., 1ல் தொடங்கிய ஓராண்டு பயிற்சி, வரும் செப்டம்பரில் நிறைவடைகிறது. பின், போலீஸ் ஸ்டேஷனில், ஆறு மாத பயிற்சி, 2022 ஏப்., 4ல் முடிகிறது. அவர்களுக்கு தேவையான பணியிடம் ஒதுக்கவே, 10 ஆண்டாக பணிபுரியும் தங்களுக்கு, பதவி உயர்வு அளிக்கவில்லை என, பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: இன்ஸ்பெக்டர்கள், 300 பேருக்கு இதுவரை, பதவி உயர்வு அளிக்கவில்லை. தற்போது, 120க்கும் அதிகமான, டி.எஸ்.பி., பணியிடம் காலியாக உள்ளதால், பணிமூப்பு அடிப்படையில் நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல்வர் தொடங்கி அமைச்சர் வரை, தங்கள் உறவினர், உள்துறை செயலக முக்கிய அதிகாரிகளின் மகன்கள், உறவினர்களுக்கு, நேரடி டி.எஸ்.பி., பணி வழங்கவே, 88 பேர் திட்டமிட்டு, முந்தைய ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தேவையான பணியிடம் ஒதுக்கவே, தகுதியிருந்தும் தற்போதைய இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. இந்த விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, பதவி உயர்வு வழங்கி, முட்டைக்கட்டை போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறுகையில், ''இதுதொடர்பாக விசாரித்து பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X