சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் தொல்லை கொடுத்த கணவரை கொன்ற மனைவி போலீசில் சரண்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஆத்தூர்: போதையில் தொல்லை கொடுத்து வந்த கணவரை, மண் வெட்டியால் அடித்துக்கொன்ற இரண்டாவது மனைவி, கருமந்துறை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, கல்வராயன்மலை, வடக்குநாடு ஊராட்சி, விலாம்பட்டியை சேர்ந்த விவசாயி அய்யாதுரை, 45. இவரது முதல் மனைவி லட்சுமி, சில ஆண்டுக்கு முன் இறந்ததால், மல்லிகா, 35, என்பவரை, இரண்டாம் திருமணம் செய்தார். மல்லிகா, தற்போது

ஆத்தூர்: போதையில் தொல்லை கொடுத்து வந்த கணவரை, மண் வெட்டியால் அடித்துக்கொன்ற இரண்டாவது மனைவி, கருமந்துறை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.


சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, கல்வராயன்மலை, வடக்குநாடு ஊராட்சி, விலாம்பட்டியை சேர்ந்த விவசாயி அய்யாதுரை, 45. இவரது முதல் மனைவி லட்சுமி, சில ஆண்டுக்கு முன் இறந்ததால், மல்லிகா, 35, என்பவரை, இரண்டாம் திருமணம் செய்தார். மல்லிகா, தற்போது வடக்குநாடு ஊராட்சி, முதலாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். அய்யாதுரைக்கு, வன உரிமை சட்டத்தில் பூண்டிக்காட்டில், 10 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. நான்கு ஆண்டாக அந்த நிலத்தை சீரமைத்து, விவசாயம் செய்து வரும் பணியில் ஈடுபட்டு வந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மணியார்பாளையம் வனப்பகுதிக்குள் அய்யாதுரை ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். கரியாலூர் போலீசார், சந்தேக மரண வழக்குப்பதிந்து விசாரித்தனர். நேற்று காலை, மல்லிகா, கருமந்துறை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். அப்போது, 'தன் கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து தொல்லை கொடுத்தார்.இதனால், களை கொத்து, மண் வெட்டியால் அடித்துக்கொன்றேன்' என கூறியுள்ளார். மல்லிகாவை, கரியாலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொலை வழக்கு பதிந்து, வேறு காரணம் உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X