பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.35 லட்சம் முறைகேடு;18 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பத்தூர்: ஆலங்காயத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட, 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நெக்னாமலை ஊராட்சியில் புரு ?ஷாத்தும குப்பம் கிராமத்தை சேர்ந்த அய்யம்மாள், 60, என்பவர் மண் சுவர் வீடு இடிந்து விழுந்து,

திருப்பத்தூர்: ஆலங்காயத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட, 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நெக்னாமலை ஊராட்சியில் புரு ?ஷாத்தும குப்பம் கிராமத்தை சேர்ந்த அய்யம்மாள், 60, என்பவர் மண் சுவர் வீடு இடிந்து விழுந்து, கடந்தாண்டு ஜூலை, 10ல் இறந்தார். அவருக்கு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல், ஊராட்சி செயலாளர் முறைகேடு செய்துள்ளார். அவர் வீடு கட்டியிருந்தால் இறந்திருக்கமாட்டார் என, அப்பகுதி மக்கள் புகார் அனுப்பினர். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆலங்காயம் ஊராட்சியில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2017- 18ல், நெக்னாமலை, கிரிசமுத்திரம், வளையாம்பட்டு, மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத், தேவஸ்தானம் ஆகிய கிராமங்களில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்தனர். அப்போது சுவர் இடிந்து இறந்த அய்யம்மாள் உள்ளிட்ட, 23 பேருக்கு நிதி ஒதுக்கி, வீடுகள் கட்டியதாக கணக்கு காட்டி அலுவலர்களே கூட்டாக சேர்ந்து, 35 லட்சத்து, 31 ஆயிரத்து, 517 ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆலங்காயம் கிராம ஊராட்சிகள் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றிய ரமேஷ்குமார், 51, (தற்போது வேலூர் மாவட்ட தணிக்கை பிரிவு உதவி இயக்குனர்) வசந்தி, 52, (தற்போது திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி திட்ட மேலாளர்) வின்சென்ட் ரமேஷ்பாபு, 52, (தற்போது வேலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்), ஆலங்காயம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்பிரசாத், 45, தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்பாபு, 47, (வளர்ச்சி) சீனிவாசன், 50, (தணிக்கை) மதிப்பீட்டாளர்கள் அழகுராசு, 56, ஞானபிரசாத், 39, தாமரை செல்வன், 52, உதவி பொறியளார் கார்த்திகேயன், 46, ஊராட்சி செயலாளர்கள் நெக்னாமலை வஜ்ஜிரவேல், 50, பள்ளிப்பட்டு சுரேந்திரன், 52, தேவஸ்தானம் முரளி, 54, ஜாப்ராபாத் ராஜேந்திரன், 54, செட்டியப்பனூர் கணபதி, 57, கிரிசமுத்திரம் பூபாலன், 51, மதனஞ்சேரி பாண்டியன், 54, வளையாம்பட்டு சிவா, 57, ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இவர்களுக்கு, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தனியாக, 17-ஏ குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள், விரைவில் சஸ்பெண்ட் ஆக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

* சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த, 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றிய அலுவலர்கள், மத்திய அரசின் திட்டங்களில் இறந்தவர்கள், முதியவர்கள், பினாமி பெயர்களில் கூட்டாக பல கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளனர். இதற்காக போலி பெயர்களில் வங்கிக் கணக்கையும் ஆரம்பித்து, பணம் வந்ததும் கணக்கை கேன்சல் செய்து விட்டனர். எனவே, மத்திய அரசின் திட்ட பயனாளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தினால் பலர் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X