பொது செய்தி

தமிழ்நாடு

வருமானத்திற்கு அதிகமாக ரூ.93 லட்சம் சொத்து சேர்த்ததாக அதிகாரி மீது வழக்கு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வேலூர்: வருமானத்திற்கு அதிகமாக, 93 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அணைக்கட்டு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது, விஜிலன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்டம், ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 55. இவர் அணைக்கட்டு ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, இவர் மீது புகார்கள் வந்தன.

வேலூர்: வருமானத்திற்கு அதிகமாக, 93 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அணைக்கட்டு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது, விஜிலன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்டம், ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 55. இவர் அணைக்கட்டு ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, இவர் மீது புகார்கள் வந்தன. கடந்த, 2ல் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் வீட்டில் சோதனை செய்து, 35 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாய், 10 சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். ஆய்வில், ரஞ்சித்குமார் அவரது வருமானத்தை விட, 272 சதவீதம் அதிகமாக, 93 லட்சத்து, 18 ஆயிரத்து, 92 ரூபாய் சொத்துக்கள் சேர்த்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X