பொது செய்தி

தமிழ்நாடு

தள்ளுபடிக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிர் கடன்கள்; வெளி மாவட்ட துணை பதிவாளர்கள் விசாரணை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வேலூர்: தள்ளுபடிக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிர் கடன்கள் குறித்து, வெளி மாவட்ட துணை பதிவாளர்கள் வேலூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.கூட்டுறவு சங்கங்களில், 2021 ஜன., 31 வரை விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக, அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்தன. முதல் கட்ட விசாரணையில், முறைகேடுகள் நடக்காதது போல

வேலூர்: தள்ளுபடிக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிர் கடன்கள் குறித்து, வெளி மாவட்ட துணை பதிவாளர்கள் வேலூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கூட்டுறவு சங்கங்களில், 2021 ஜன., 31 வரை விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக, அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்தன. முதல் கட்ட விசாரணையில், முறைகேடுகள் நடக்காதது போல அந்தந்த பதிவாளர்களால் அறிக்கை அனுப்பப்பட்டது. தொடர்ந்து புகார்கள் வரவே, வெளி மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது.

இது குறித்து, கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியதாவது: ஜன., 31க்கு பிறகு வழங்கப்பட்ட தனிநபர் கடன், வியாபாரம், வீட்டு அடமானம் என பிற கடன்கள், முன் தேதியிட்டு பயிர் கடன்களாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தள்ளுபடி செய்யப்பட்ட பணத்தை, பயனாளிகளுக்கு வழங்காமல் அவர்கள் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. பயிர் கடன் வழங்காத காலத்திலும், வழங்கியதாக குறிப்பிட்டு அவற்றை தள்ளுபடி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல சங்கங்களில் பணமே இல்லாத போது, கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. எனவே, பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலை, 100 சதவீதம் தணிக்கை செய்து வருகிறோம். அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் விசாரணை நடத்தினால், முறைகேடுகளை மூடி மறைத்து விடுவார்கள். இதனால், வேலூர் மாவட்ட பதிவாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், அங்குள்ளவர்கள் வேலூர் மாவட்டத்திற்கும், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர்கள் திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் கூட்டுறவு சங்க அலுவலர்கள், சரக மேற்பார்வையாளர்கள், கள மேலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X