5 முறை போனை மாற்றியும் ஒட்டுக்கேட்பு பிரச்னை ஓயவில்லை: பிரசாந்த் கிஷோர்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (84)
Share
Advertisement
புதுடில்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், ‛தனது செல்போனை இதுவரை ஐந்து முறை மாற்றிவிட்டதாகவும் இருந்தாலும்கூட, ஒட்டுக்கேட்பு பிரச்னை ஓயவில்லை,' என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகளும் பயங்கரவாதத் தடுப்பு போன்ற
Prashant Kishor, Changed Handset, Hacking Continues, PK, பிரசாந்த் கிஷோர், போன், ஒட்டுக்கேட்பு,

புதுடில்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், ‛தனது செல்போனை இதுவரை ஐந்து முறை மாற்றிவிட்டதாகவும் இருந்தாலும்கூட, ஒட்டுக்கேட்பு பிரச்னை ஓயவில்லை,' என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகளும் பயங்கரவாதத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை இந்தியா அந்த உளவு மென்பொருளைக் கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் போனும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.


latest tamil news


2014ல் பிரதமர் மோடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்ததுடன், நாடு முழுவதும் மோடி அலை, மோடி அலை எனபேசவும், ‛குஜராத் மாடல் வளர்ச்சி' என்று அனைவரும் விவாதிக்கவும் வழிவகுத்தவர் பிரசாந்த் கிஷோர். அதன்பின்னர், சில கருத்துவேறுபாடால் பா.ஜ., உடனான தொடர்பை முறித்துக்கொண்ட அவர், சமீபகாலமாக பா.ஜ., எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் வியூக பணியாற்றி வெற்றி பெற செய்துள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் தொலைபேசியை கடந்த ஜூன் மாதத்தில் 14 நாட்களும், ஜூலை மாதத்தில் 12 நாட்களும் ஒட்டுக்கேட்டுள்ளனர். காங்., எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்காவை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசிய 13ம் தேதியும் அவரின் போன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், ‛2017 முதல் 2021 வரையில் என் மொபைலில் ஒட்டுக்கேட்பு நடப்பதை உணரவில்லை. இந்த காலக்கட்டத்தில் 5 முறை போனை மாற்றிவிட்டாலும், ஒட்டுக்கேட்பு பிரச்னை ஓயவில்லை. ஹேக் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது,' எனப் பேசியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரோன் - Tirunelveli,இந்தியா
22-ஜூலை-202114:59:11 IST Report Abuse
ஆரோன் அவன ஃபோனை மாத்துறதுக்கு பதிலாக போண் நம்பரை மாத்த சொல்லுப்பா... அவன் எத்தனை போணை‌ மாத்தினாலும் அந்த போணுக்கு போண் வரத்தான் செய்யும்.. இவனை நம்மி எப்படி அரசியல் கட்சி காரனுவ அசென்மென்ட் கொடுக்கானுவ.. அதுசரி ஏமாத்துரனுவ எங்கேயாவது ஏமாந்து தானே அவனும்டே.. அதுக்குதான் ஏமாத்தாதே ... ஏமாறாதேன்னு அன்னைக்கே பாடிருக்கானுவ போல...
Rate this:
Cancel
22-ஜூலை-202108:52:37 IST Report Abuse
தமிழன் அண்ட புளுகு .கட்சிகள் எப்படி மக்களை ஏமாற்றலாம் என்று சொல்லி கொடுத்து பணம் சமபாதித்தவன்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
22-ஜூலை-202104:18:09 IST Report Abuse
meenakshisundaram நீங்க செய்ற வேலை அப்படிப்பட்டது தொலைஞ்சு போனவர்களை எல்லாம் முதல்வர் ஆக்குறேன் ,பிரதமர் ஆக்குறேன்னு காசுக்கு வேலை செய்வது நாட்டுக்கே நல்லது இல்லியே ,அதுனாலே எத்தினி தபா போனை மாற்றினாலும் ஒட்டுக்கேட்போது அவசியமாத்தானே இருக்கு ,செய்றா காரியதுல்லே தப்பு இல்லைன்னா பயம் வேண்டாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X