பெகாசஸ் ஸ்பைவேர்-க்கு பணம் கொடுத்தது யார்?: சு.சுவாமி கேள்வி

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (55) | |
Advertisement
புதுடில்லி: 'பெகாசஸ் ஸ்பைவேர்-க்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பது தவிர்க்க முடியாத கேள்வி' எனவும், 'அது இந்திய அரசு இல்லையெனில் வேறு யார் கொடுத்தார்கள் என்பதை மக்களுக்கு சொல்வது மோடி அரசின் கடமை,' என்றும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பல்வேறு அரசியல் தலைவர்கள்,
Subramanian Swamy, Pegasus Spyware, Indian Operation, Who Paid, BJP, சுப்பிரமணியன் சுவாமி, பாஜக, பெகாசஸ் ஸ்பைவேர், பணம்

புதுடில்லி: 'பெகாசஸ் ஸ்பைவேர்-க்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பது தவிர்க்க முடியாத கேள்வி' எனவும், 'அது இந்திய அரசு இல்லையெனில் வேறு யார் கொடுத்தார்கள் என்பதை மக்களுக்கு சொல்வது மோடி அரசின் கடமை,' என்றும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் போன்களை உளவு பார்த்தது மட்டுமல்லாமல் ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகி வரும் சூழலில், இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇது குறித்து தனது டுவிட்டர் பதிவில், ‛ஒட்டுக்கேட்பு விவகாரம் மிகவும் பெரிய பிரச்னை. தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு தரவுகளை சேகரித்து வரும் இஸ்ரேல் நிறுவனத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லி.,யில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் போன்று இது பா.ஜ.,விற்கு பெரும் சோதனையாக மாறும்,' எனப் பதிவிட்டுள்ளார்.latest tamil newsமற்றொரு டுவிட்டில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளதாவது: பெகாசஸ் ஸ்பைவேர், கட்டண ஒப்பந்தங்களில் பணியாற்றும் ஒரு வணிக நிறுவனம் என்பது தெளிவாக உள்ளது. இந்திய "நடவடிக்கைக்கு" அவர்களுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பது தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. அது இந்திய அரசு இல்லையென்றால் வேறு யார்? அதை மக்களுக்கு சொல்வது மோடி அரசின் கடமை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-202122:23:35 IST Report Abuse
DARMHAR அரசியல் விவகாரங்களில் யாராக இருந்தாலும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்புபவர் திரு.சுப்பிரமணிய சுவாமி. அவர்கள்.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-202111:19:03 IST Report Abuse
Paraman இஸ்ரேலுடன் தொடர்பில் இருப்பது DR.ஸ்வாமிதான். அவரு இதை கையில் எடுக்கிறார் என்றால் அதற்க்கு பின்னால் எதிரிகளின் மிக பெரிய சதி உள்ளது என்று அர்த்தம். இப்போது அமித்ஷா, உள்துறை அமைச்சகம், மோடி என்று பிஜேபி அரசு பல முக்கியமான விஷயங்களில் தேவையில்லாத அமைதி காப்பது செயலற்று இருப்பது, இன்றைய இந்திய நிலவரத்துக்கு சரியானது இல்லை. அதனால் தான் இவர்களை செயல்பட DR.சுவாமி இந்த வெடிகளை கொளுத்தி போட்டுள்ளார. அவரு எப்போவும் சேம் சைட் கோல் போடுவது மாறி தெரியும்... ஆனால் கடைசியில் தான் தெரியும் அவரு கோல் போடாமல் எதிரணிக்கு பின்னால் ஆழமா ஆப்பை சொருகியது. இத்தாலி சோனியாவும், ராவுல் வின்சியும் அடக்கி வாசிப்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் , இதற்க்கு பின் அவர்களின் தீய கரங்கள் உள்ளன என்பதும். ஆகையால் ரொம்பவும் உணர்ச்சி பட வேண்டாம் திருட்டு தீயமூக்கா அல்லக்கை கும்பல்கள் ...
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
22-ஜூலை-202103:41:46 IST Report Abuse
meenakshisundaram கிஷோர் க்கு கொடுக்கப்பட்ட பணம் தேர்தல் செலவில் வரும்,ஆனா வராது போட்ட முதல் எப்படி திரும்ப எடுப்பார்கள் ?இந்த கேள்விக்கு தமிழக அரசோ ஸ்டாலினோ பதில் சொல்ல வேண்டும் .இல்லையேல் கூட்டணி கட்சியான கமினிஸ்டுகள் சொல்வார்களா?
Rate this:
R Srinivasan - hyderabad,இந்தியா
22-ஜூலை-202115:10:22 IST Report Abuse
R Srinivasanஅது எப்பிடிப்பா, எங்களை போட்டு வாங்க பாக்கிறிங்க, நாங்க என்ன அவ்ளோ முட்டாளா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X