பொது செய்தி

தமிழ்நாடு

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் மாறும்: முதல்வர் ஸ்டாலின்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை: ''முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் நிச்சயம் மாறும்'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை கிண்டியில் இன்று தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.அதில், ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்,
DMK, Stalin, TN, Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: ''முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் நிச்சயம் மாறும்'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் இன்று தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.அதில், ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம், ரூ.4,250 கோடி முதலீட்டில் 21,630 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூ.7,117 கோடி மதிப்பில் 6,798 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப்பணிகளை துவக்கிவைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.


latest tamil news



இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பண்பாட்டின் முகவரியாக திகழும் தற்போது முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறி வருகிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் நிச்சயம் மாறும். தொழில் துவங்க உகந்த மாநிலங்களில் தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். இதுவே லட்சியம். 2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் ஜிடிபி கொண்ட மாநிலமாக தமிழகம் மாறும். உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மின்வாகன உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம். அதிகளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தொழில்துறையின் பொற்காலமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
21-ஜூலை-202120:42:14 IST Report Abuse
ellar ஆனானப்பட்ட ஸ்வீடன் நாட்டுளையும் ஜப்பானிலையும் மந்திரி ட்ரெயினில தான் ஆபீஸ் போராரு. நமக்கு எதுக்கு 27 வண்டி??? முதலில் ஷஅதுல உலகத்தரம் ஆனால் தப்பா? முதல்வர் மந்திரி மற்றும் MLAக்களை அவ்வாறு மாற்ற வேண்டும். அத்தோடு. புதிய வேலை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.. வேலைக்கு ஆள் பற்றாக்குறையை முதலாளிகளை கேட்டாவது உண்மை பேசும் நிலையை கொண்டு வர வேண்டும்.
Rate this:
Cancel
21-ஜூலை-202106:05:50 IST Report Abuse
ராஜா தமிழ்நாட்டில் இருந்து கொங்கு மண்டலம் பிரிந்தால், முதலீட்டு விஷயத்தில் தமிழ்நாட்டின் முகவரியே காணாமல் போய்விடும். சென்னையில் உள்ள ஐடி கம்பெனிகளை வைத்து பல்லுக்கூட குத்த முடியாது...
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
20-ஜூலை-202123:51:00 IST Report Abuse
HSR வை ராஜா வை..ஒன்னு வெச்சா பத்து எடுத்துட்டு போலாம். அதுல 5 எங்களுக்கு கட்டிங்..அம்புடுதான் டீல் ஓவர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X