பெகாசஸ் ஸ்பைவேர் எப்படி உளவு பார்க்கிறது?

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் மூலமாக பல அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களை உளவு பார்த்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப வல்லுநர்களே இந்த ஸ்பைவேர்-ஐ எப்படி அழிப்பது எனத் தெரியாமல் கதிக்கலங்கி போகின்றனர். அப்படி அந்த ஸ்பைவேர் எப்படி வேலை செய்கிறது, அதனால் வரும் ஆபத்துகள் என்ன என்பது குறித்து
Pegasus Spyware, Spy, Works, பெகாசஸ் ஸ்பைவேர், உளவு

புதுடில்லி: பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் மூலமாக பல அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களை உளவு பார்த்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப வல்லுநர்களே இந்த ஸ்பைவேர்-ஐ எப்படி அழிப்பது எனத் தெரியாமல் கதிக்கலங்கி போகின்றனர். அப்படி அந்த ஸ்பைவேர் எப்படி வேலை செய்கிறது, அதனால் வரும் ஆபத்துகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்...

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளது. இதனை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரை உளவுப் பார்க்கக்கூடிய மென்பொருளாகும். இந்த ஸ்பைவேர் ஒருவரது ஸ்மார்ட்போனில் புகுந்து, அவரின் தகவல்கள் அனைத்தையும் பயனர்களின் அனுமதி இல்லாமல் எடுப்பதுடன், அவர்களின் அனைத்து போன் கால்கள், செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்கிறது. அதாவது உங்கள் போனில் பெகாசஸ் ஸ்பைவேர் நிர்வகிக்கப்பட்டால், அந்த சாதனம் 24 மணிநேரமும் உங்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் சாதனமாக மாறுகிறது.


latest tamil newsஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை இந்த ஸ்பைவேர் தாக்குகிறது. தற்போது வரை ஐபோன்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. துவக்கத்தில் இ-மெயில் அல்லது மெசேஜ் மூலமாக தவறான ஒரு லிங்கை அனுப்பி, அதனை பயனர்கள் க்ளிக் செய்வது மூலம் இந்த ஸ்பைவேரை மொபைலில் புகுத்திவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஜீரோ க்ளிக் அட்டாக் (zero click attack) எனப்படும் முறையில் ஹேக்கர்கள் வடிவமைத்துள்ளனர். அதாவது ஸ்பைவேர் அடங்கிய லிங்க்-ஐ க்ளிக் செய்யாமலேயே உங்கள் மொபைலில் நிர்வகித்து தகவல்களைப் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


வாட்ஸ்ஆப், ஐமெசேஜ் மற்றும் எஸ்.எம்.எஸ் போன்ற செயலிகளில் இருக்கும் பக் எனப்படும் பலவீனமாக சாத்தியக் கூறுகளை பயன்படுத்தி உள்ளே நுழையும் இந்த ஸ்பைவேர் எந்த ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தாத வகையில் மிகவும் அமைதியாக செயல்படும். மிகவும் குறைவான பேட்டரி திறனை செலவு செய்வதால், பயனர்களுக்கு தங்களின் போன் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதை உணர்வதே கடினமாக உள்ளது. மொபைல் கேமரா, மைக், ஜிபிஎஸ் உள்ளிட்டவைகளை பயனர்களின் அனுமதி இல்லாமலேயே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் இந்த ஸ்பைவேர், நமது இருப்பிட தகவல்கள், நடவடிக்கைகள், என்க்ரிப்ட் செய்யப்பட்ட செய்திகளை கூட பார்த்து சேகரிக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-202102:05:27 IST Report Abuse
s.sivarajan இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்பதெல்லாம் பெயரளவில் தான் மற்றபடி கடிவாளமெல்லாம் வெளிநாட்டினர் கையில்தான் போல.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-202118:15:43 IST Report Abuse
Kasimani Baskaran அம்னெஸ்டியின் இணையத்தளம் பத்திரிக்கையாளர்களை மட்டுமே உளவு பார்த்ததாக சொல்கிறது. ஆனால் காங்கிரசின் வயர் அரசியல்வாதிகள் என்பதை சேர்த்து விட்டு இருக்கிறது.
Rate this:
Cancel
20-ஜூலை-202116:17:27 IST Report Abuse
அப்புசாமி யாரு கண்டா... நமது பிரதமர், ஜனாதிபதி, பாதுகாப்பு, நிதி, உள்துறை அமைச்சர்களுடைய செல்போன் விவரங்ஜளையும் சேகரித்து இஸ்ரேலுக்கு அனுப்புகிறதோ என்னவோ? இவிங்க யாருக்கும் மடியில் கனமில்லை. எனவே பயமில்லை பல்லவிதானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X