தேனீ வளர்ப்பின் மூலம் கூடுதல் மகசூல்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனீ வளர்ப்பின் மூலம் கூடுதல் மகசூல்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

Added : ஜூலை 20, 2021
Share
ப.வேலூர்: பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: பரமத்தி வட்டார விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை கையாளலாம். தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. தேனீக்களால் பயிறு வகைப் பயிர்கள் எண்ணெய் வித்துக்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும்

ப.வேலூர்: பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: பரமத்தி வட்டார விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை கையாளலாம். தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. தேனீக்களால் பயிறு வகைப் பயிர்கள் எண்ணெய் வித்துக்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பழ மரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை கூடுதலாக நடக்கிறது. குறிப்பாக ஆப்பிள், பேரிக்காய், தர்பூசணி, முலாம் பழம், எலுமிச்சை போன்ற பயிர்களின் பழ மகசூலும், பழங்களின் தரமும் கூடுவதற்கு தேனீக்களின் வரவு தேவைப்படுகிறது. தேனீக்களால் வெள்ளரி மகசூலை இரட்டிப்பாக்க முடியும். மேலும் கேரட், வெங்காயம் போன்ற காய்கறிப் பயிர்களில் தரமான விதைகளை கூடுதலாக உற்பத்தி செய்ய தேனீக்கள் உதவுகின்றன. சூரியகாந்தி, எள், கடுகு போன்ற எண்ணெய் வித்துப்பயிர்களில் உயர் மகசூல் பெற தேனீக்கள் பெரிதும் உதவுகின்றன. தென்னந்தோப்புகளில் தேனீப் பெட்டிகளை வைப்பதால் நெட்டை ரக தென்னையில் குரும்பை உதிர்வது குறைந்து காய் மகசூல், 13 விழுக்காடு கூடுகிறது. விபரங்களுக்கு, வட்டார வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X