பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு: மாவட்டத்தில் 20,534 பேர் தேர்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 20 ஆயிரத்து, 534 மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, 2020, மார்ச், 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதையடுத்து, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டும், கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வுகள் நடத்த

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 20 ஆயிரத்து, 534 மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, 2020, மார்ச், 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதையடுத்து, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டும், கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலையில் ரத்து செய்யப்பட்டது. மதிப்பெண் வழங்க கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின்படி, மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதன் விபரங்களை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று வெளியிட்டார். நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகள் என, மொத்தம், 105 பள்ளிகள் உள்ளன. அதில், நாமக்கல் கல்வி மாவட்டத்தில், 5,013 மாணவியர், 4,757 மாணவர்கள் என, மொத்தம், 9,770 பேரும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், 5,492 மாணவியர், 5,272 மாணவர் என, மொத்தம், 10 ஆயிரத்து, 764 பேர், பிளஸ் 2 படிக்கின்றனர். இரண்டு கல்வி மாவட்டத்திலும், மொத்தம், 20 ஆயிரத்து, 534 மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை, வரும், 22ல், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


பொதுத்தேர்வு நடத்தியிருந்தால், இன்னும் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன். எதிர்காலத்தில், டாக்டராக விரும்புகிறேன். அதற்காக, 'நீட்' தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறேன். 10, பிளஸ் 1 தேர்வு அடிப்படையில் மதிப்பெண் கணக்கிட்டது சரியே. திருப்தியில்லாதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பிருப்பதால், யாருக்கும் பாதிப்பு இல்லை.


- ஜி.துளசிகா, 18 எருமப்பட்டி

தற்போது, 496 மதிப்பெண் பெற்றுள்ளேன். இன்னும் கூடுதலாக வரும் என எதிர்பார்த்தேன். மொபைல் போன் இல்லாததால், ஆன்லைன் மூலம் பாடம் கற்க முடியவில்லை. ஆசிரியர்கள் கொடுத்த நோட்?ஸ பயன்படுத்தி படித்தேன். வரும் காலத்தில், டாக்டராக வேண்டும் என்பதே என் கனவு.


- என்.நதியா, 18 சிவியாம்பாளையம்

பொதுத்தேர்வில், 500 மதிப்பெண் எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கு குறைவாகவே வந்துள்ளது. தேர்வு நடத்தியிருந்தால், இப்போது வாங்கியதை விட அதிகமாக வாங்கியிருப்பேன். காரணம், பிளஸ் 2 தேர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து படித்திருப்போம். ஆடிட்டராக வேண்டும் என்பதே என் லட்சியம்.


- பி.கேசவன், 18 பெரியப்பட்டி

எதிர்பார்த்த மதிப்பெண் பெற்றுள்ளேன். மூன்று மாதம் பள்ளி திறந்தபோதும், ஆன்லைன் மூலமும் மும்முரமாக பாடங்களை கவனித்து படித்தேன். பள்ளி ஆசிரியர்களும் உரிய விளக்கம் அளித்தனர். எதிர்காலத்தில், நன்கு படித்து ஆடிட்டராக வேண்டும் என்பது என் கனவு.


- எம்.சந்துரு, 18 மரூர்பட்டி

எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்துள்ளது. தேர்வு எழுதியிருந்தால் இந்த மார்க் கிடைக்கும் என நினைத்திருந்தேன். தற்போது நான் எதிர்பார்த்தளவு மதிப்பெண் கிடைத்துள்ளது. அரசு பள்ளியில் நான் முதல் மதிப்பெண் என்பது சந்தோஷமாக உள்ளது. இதற்கு காரணமான தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


- எஸ். யுவராஜ், 18 பள்ளிபாளையம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X