பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு எதிர்ப்பு மாதம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்டுதோறும் ஜூலை மாதம் டெங்கு எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் பேசியதாவது: மழை நீர் தேங்கும் தேவையில்லாத பொருட்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பழைய டயர்கள், உடைந்த மண் பாண்டங்கள் போன்றவற்றில் ஏ.டி.எஸ்., கொசுக்கள் முட்டையிட்டு

நாமக்கல்: நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்டுதோறும் ஜூலை மாதம் டெங்கு எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் பேசியதாவது: மழை நீர் தேங்கும் தேவையில்லாத பொருட்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பழைய டயர்கள், உடைந்த மண் பாண்டங்கள் போன்றவற்றில் ஏ.டி.எஸ்., கொசுக்கள் முட்டையிட்டு லார்வா, பியூப்பா, முதிர்ந்த கொசுஎன்ற நிலையில் மனிதர்களை கடிக்கும் போது டெங்கு ஜிகா போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே, வீட்டின் அருகே தேவையற்ற பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இறுதியில் டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றதுடன் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X