பொருளாதார மேம்பாட்டு கழகத் திட்டம்: கடன் பெற தகுதி விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதார மேம்பாட்டு கழகத் திட்டம்: கடன் பெற தகுதி விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜூலை 20, 2021
Share
நாமக்கல்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்கள், பொருளாதார மேம்பாடு அடைய, 2021-22ம் ஆண்டுக்கான கடன் திட்டங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனி நபர், சிறுகடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன், கறவை மாடு கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப

நாமக்கல்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்கள், பொருளாதார மேம்பாடு அடைய, 2021-22ம் ஆண்டுக்கான கடன் திட்டங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனி நபர், சிறுகடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன், கறவை மாடு கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளியின் வயது, 18 முதல், 60 வரை இருக்க வேண்டும். சுய உதவிக் குழு துவங்கி, ஆறு மாதம் பூர்த்தியாகி இருக்க வேண்டும். தனிநபர் கடன் அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. சுய உதவி குழுவிற்கு, ஒரு நபருக்கு, ஒரு லட்சம் வீதம், ஒரு குழுவுக்கு, 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், நாமக்கல், அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X