பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலையில் பனிமூட்டம்; போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கொல்லிமலை: கொல்லிமலையில், பனிமூட்டம் அதிகமிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அடிவாரப்பகுதியான காரவள்ளியில், வாகனங்களை பதிவு செய்து அனுப்புகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டம் முழுவதும் தட்பவெட்பநிலை மாறியுள்ளது. குளிர்ந்த காற்று

கொல்லிமலை: கொல்லிமலையில், பனிமூட்டம் அதிகமிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அடிவாரப்பகுதியான காரவள்ளியில், வாகனங்களை பதிவு செய்து அனுப்புகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டம் முழுவதும் தட்பவெட்பநிலை மாறியுள்ளது. குளிர்ந்த காற்று வீசுவதுடன் இரவில் கடும் குளிர் நிலவிவருகிறது. மலைப்பகுதியான கொல்லிமலையில் காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகம் காணப்படுகிறது. தற்போது, சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் பனிமூட்டத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வளைவான பகுதிகளில், 10 அடி தூரத்திற்கு அப்பால் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடிவதில்லை. இரு சக்கர வாகனங்கள், கார்களில் வருபவர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர். சிலர், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு பனி கலைந்த பிறகு செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X