சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிரட்டி பணம் பறிப்பு: நான்கு பேர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த அம்மாசிபாளையத்தில் வேலை கேட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பேரிடம், மிரட்டி, தாக்கி பணம் பறித்த நான்கு பேரை மொளசி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அம்மாசிபாளையத்தை சேர்ந்தவர் ரவி, 48. அவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் வேலை கேட்டு வந்துள்ளனர். அப்போது ரவி, பிரகாஷ், 22, அசாமை

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த அம்மாசிபாளையத்தில் வேலை கேட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பேரிடம், மிரட்டி, தாக்கி பணம் பறித்த நான்கு பேரை மொளசி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அம்மாசிபாளையத்தை சேர்ந்தவர் ரவி, 48. அவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் வேலை கேட்டு வந்துள்ளனர். அப்போது ரவி, பிரகாஷ், 22, அசாமை சேர்ந்த ராகுல், 24, ஒடிசாவை சேர்ந்த சாமீர் மானுக், 24, ஆகியோர் சேர்ந்து, வேலை கேட்டு வந்த மூன்று பேரிடமிருந்து இரண்டு மொபைல்போன், 16 ஆயிரம் ரூபாயை மிரட்டி, தாக்கி பறிமுதல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மூவரும், அவர்களது நண்பர் செல்வம் என்பவர் மூலம் நேற்று புகார் அளித்தனர். நால்வரையும் கைது செய்து விசாரிக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X