சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூ வீலர்கள் மோதல்: விவசாயி பலி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ப.வேலூர்: வேலகவுண்டம்பட்டியில், டூ வீலர்கள் மோதிக்கொண்டதில் விவசாயி பலியானார். நாமக்கல், மதுரைவீரன் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 59; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு தன் பேரன் சரவணனை டூ வீலரில் அழைத்துக் கொண்டு வேலகவுண்டம்பட்டி சென்றார். மீண்டும் நாமக்கல் செல்வதற்காக அப்பகுதியில் உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக திரும்பியபோது, அதிவேகமாக வந்த பைக் மோதியது.

ப.வேலூர்: வேலகவுண்டம்பட்டியில், டூ வீலர்கள் மோதிக்கொண்டதில் விவசாயி பலியானார். நாமக்கல், மதுரைவீரன் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 59; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு தன் பேரன் சரவணனை டூ வீலரில் அழைத்துக் கொண்டு வேலகவுண்டம்பட்டி சென்றார். மீண்டும் நாமக்கல் செல்வதற்காக அப்பகுதியில் உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக திரும்பியபோது, அதிவேகமாக வந்த பைக் மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன், 10, அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய அதியரசு ஆகியோரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X