அதிமுக கொடியுடன் காரில் வலம் வரும் சசிகலா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிமுக கொடியுடன் காரில் வலம் வரும் சசிகலா

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (28)
Share
சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து சசிகலா கேட்டறிந்தார். அப்போது காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை
ADMK, Flag, Sasikala, அ.தி.மு.க,சசிகலா, மதுசூதனன்

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து சசிகலா கேட்டறிந்தார். அப்போது காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மருத்துவமனைக்கு சென்று மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது, சசிகலாவும், அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில். மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார். இதனையறிந்த பழனிசாமி அங்கிருந்து கிளம்பி சென்றார். தொடர்ந்து மதுசூதனன் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் உடல்நலம்பெற வேண்டும். அதிமுக மீது பற்றுக்கொண்ட அவரது உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் பார்க்க வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பின்னர், அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக பேசி, அதனை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு சசிகலாவுடன் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கி பழனிசாமி மற்றும் பன்னீ்செல்வம் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சசிகலா திடீரென மருத்துவமனைக்கு வந்து மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X