தாயை கொலை செய்த மகன்: 3 ஆண்டுகளுக்கு பின் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயை கொலை செய்த மகன்: 3 ஆண்டுகளுக்கு பின் கைது

Added : ஜூலை 20, 2021
Share
நாமக்கல்: நடத்தையில் சந்தேகத்தால், தாயை கொலை செய்து நாடகமாடிய மகன், அவரது நண்பரை, மூன்று ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த ஆனங்கூர் பட்டணத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வெங்கடேசன், 2018, ஏப்., 8ல், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதில், வீட்டுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த தன் தாய் ராஜலட்சுமியை யாரோ தாக்கினர்.

நாமக்கல்: நடத்தையில் சந்தேகத்தால், தாயை கொலை செய்து நாடகமாடிய மகன், அவரது நண்பரை, மூன்று ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த ஆனங்கூர் பட்டணத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வெங்கடேசன், 2018, ஏப்., 8ல், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதில், வீட்டுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த தன் தாய் ராஜலட்சுமியை யாரோ தாக்கினர். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாக தெரிவித்திருந்தார். மூன்று ஆண்டுகளாக குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாதநிலை நீடித்து வந்தது. இந்நிலையில், டி.எஸ்.பி., செல்வம் நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு தலைமையில், தனிப்படையினர், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வெங்கடேசன், அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதற்கிடையில், போலீசாருக்கு பயந்த இருவரும், நேற்று முன்தினம், சீத்தாராம்பாளையம் வி.ஏ.ஓ., முன் சரணடைந்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: வெங்கடேசன் தந்தை பாண்டியராஜன் குடும்ப பிரச்னையால், மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதிலிருந்து, வெங்கடேசனின் தாயார் நடத்தை சரியில்லை. இது குறித்து, அவரது காதுபடவே தரக்குறைவாக பேசிவந்தனர். அதனால், தன் தாயாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதற்காக, தன் நண்பர் பிரபாகரன் உதவியுடன், 2018, ஏப்., 7 இரவு, 1:00 மணிக்கு, தாயார் தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இருவரையும் கைது செய்தோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X