புதுப்பட்டி கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பட்டி கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்

Added : ஜூலை 20, 2021
Share
கிருஷ்ணராயபுரம்: புதுப்பட்டி கிராமத்தில், காய்ச்சல் தடுப்பு முகாம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, புதுப்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. இதில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் பார்க்கப்பட்டன். மக்களுக்கு கபசுரகுடிநீர், சத்து மாத்திரைகள்

கிருஷ்ணராயபுரம்: புதுப்பட்டி கிராமத்தில், காய்ச்சல் தடுப்பு முகாம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, புதுப்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. இதில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் பார்க்கப்பட்டன். மக்களுக்கு கபசுரகுடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. டாக்டர் அன்புச்செல்வன் மருத்துவ ஆலோசனை வழங்கினார். மேலும் கொரோனா பரவல் தடுக்கும் வகையில், மக்கள் முக கவசம் அணிந்து இருப்பது அவசியம் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது. சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X