பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வெஞ்சமாங்கூடலூர், கீழ்பாகம் பஞ்., ஊத்துக்கரைபட்டி காலனியில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பழுதடைந்து மேல்பாகம் இடிந்து உள்பகுதியில் உள்ளே விழுந்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வெஞ்சமாங்கூடலூர், கீழ்பாகம் பஞ்., ஊத்துக்கரைபட்டி காலனியில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பழுதடைந்து மேல்பாகம் இடிந்து உள்பகுதியில் உள்ளே விழுந்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து நேற்று, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக் குடங்களுடன் குடிநீர் கேட்டு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஏ.பி.டி.ஓ., கனகராஜிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், 'குடிநீர் தேவையை போக்க, தனியாரிடம் ஒரு குடம் தண்ணீர், ஏழு ரூபாய்க்கு வாங்குகிறோம். கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவில்லை எனில், தங்களுடைய ரேஷன்கார்டு, அரசு ஆவணங்கள் அனைத்தையும் அரசிடமே ஒப்படைத்து விடுவோம்' என்றனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், காலிக்குடங்களுடன் தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். ஏ.பி.டி.ஓ., மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, போராட்டம் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X