பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றம்: நீதிபதி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில், நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது என, மாவட்ட நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவருமான கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு மாவட்டத்திலும், பொது பயன்பாட்டு சேவைகள் குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டு

கரூர்: கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில், நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது என, மாவட்ட நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவருமான கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு மாவட்டத்திலும், பொது பயன்பாட்டு சேவைகள் குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டு சேவையில் அனுபவம் உள்ள, இரண்டு பேர் உறுப்பினராகவும், மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள நீதிபதி தலைவராகவும் கொண்டு, நிரந்தர மக்கள் நீதிமன்றம், கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, மாற்றுமுறை சமரச தீர்வு மையத்தில் இயங்கி வருகிறது. நிரந்தர மக்கள் நீதிமன்றம் முன், வழக்கமான நீதிமன்ற விதிமுறைகள் இல்லாமல், சாதாரணமான முறையில், மனுதாக்கல் செய்யலாம். இதன் மூலம், வழக்குகளை விரைவாக முடிக்கலாம். இருதரப்பினரும் ஆஜரான பிறகு, சமரச முறையில் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும். ஏதாவது ஒரு தரப்பினர் சமரசத்துக்கு முன் வர தவறும் பட்சத்தில், அந்த நபருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, இறுதியான உத்தரவு பிறப்பிக்கப்படும். இதன் முடிவு உரிமையியல் நீதிமன்றத்துக்கு சமமானது. நிரந்தர மக்கள் நீதிமன்றத்துக்கு எதிராக மேல் முறையீடு செய்ய முடியாது. இந்த உத்தரவு இறுதியானது. கடுமையான நடைமுறைகள் இல்லாமல், ஏழை எளிய மக்கள் பயன்பெறலாம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X